“நாங்களும் விவாகரத்து செய்கிறோம்”…ரஹ்மானின் கிட்டாரிஸ்ட் மோகினி தே அதிர்ச்சி அறிவிப்பு!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானைத் தொடர்ந்து அவர் இசைக் குழுவைச் சேர்ந்த ஒரு பெண்ணும் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்துகொள்வதாக அறிவித்தது திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் விவாகரத்து செய்வதாக சமூக வலைத்தளங்களில் மூலம் அறிவித்த சில மணி நேரங்களில் அவருடைய இசைக் குழுவில் பணியாற்றி வந்த பேஸ் கிட்டார் கலைஞர் மோகினி தே என்ற பெண் இசைக்கலைஞரும் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்துகொள்வதாக அறிவித்துள்ளார்.
இந்த விவாகரத்து முடிவுகுறித்து மோகினி தே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது ” நான் என்னுடைய கணவரைப் பிரிந்து செல்ல முடிவெடுத்திருக்கிறேன். இந்த முடிவு நாங்கள் ஒன்றாகக் கலந்து பேசி கனத்த இதயத்துடன் எடுத்துக்கொண்ட முடிவு. எங்களுடைய இருவரின் பாதை வெவ்வேறு என்பதால் இந்த முடிவை எடுத்துக்கொள்ள விரும்புகிறோம்.
எங்களுடைய இந்த முடிவுக்கு மதிப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவாகரத்து பெற்றுக்கொண்டாலும் நாங்கள் நண்பர்களாக இருப்போம் எங்களுடைய நட்பு தொடரும். நாங்கள் இருவரும் சேர்ந்து இசையை ரீதியாக பணியாற்றுவோம். மற்றபடி எங்களுடைய விவகாரத்தை வைத்து தவறாக எதுவும் பேசவேண்டாம்” என கேட்டுக்கொண்டுள்ளார்.
மோகினி தே பிரபல இசைக்கலைஞரான மார்க் ஹார்ட்சுச்சை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் ஒன்றாகப் பல பாடல்களில் பணியாற்றியுள்ளார்கள். கொல்கத்தாவில் மோகினி தே பாடல் என்றாலே அதற்குத் தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மானை தொடர்ந்து அவரும் தன்னுடைய விவகாரத்தை அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. மேலும், ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து 40-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் மோகினி தே பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram