நலிந்த நாடக நடிகர்களுக்கு நலவாரியம் : நடிகர் கருணாஸ்
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், சேலத்தில் நடிகர் கருணாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தென்னிந்திய நடிகர் சங்கத்தினருக்கு, பாண்டவர் அணியினர் அளித்த அனைத்து வாக்குறுதிகளும், நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், முதலமைச்சரை சந்தித்து நலிந்த நாடக நடிகர்களுக்கு நலவாரியம் அமைக்க கோரிக்கை விடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.