விஜயின் பிகில் திரைப்படத்தை நாங்கள் திரையிட மாட்டோம்! பிரபல திரையரங்கம் எடுத்த அதிரடி முடிவு!

Default Image

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில். இந்த திரைப்படம் வரும் 25-ம் தேதி வெளியாகவுள்ளது. பொதுவாக அஜித் மற்றும் விஜய் திரைப்படங்கள் வெளியாகும் போது, ரசிகர்களின் அட்டகாசம் தாங்க முடியாது.
இந்நிலையில், திருச்சியில் உள்ள ரம்பா திரையரங்கம், எங்கள் தியேட்டரில் பிகில் திரைப்படத்தை வெளியிட மாட்டோம் என்று விநியோகஸ்தர்களிடம் அடித்து சொல்லியுள்ளனர். மேலும் நடிகர் கார்த்தியின் கைதி திரைப்படத்தை வெளியிட போவதாக கூறியுள்ளனர்.
இதற்கான காரணத்தை அவர்கள் கூறுகையில், திருச்சி நகரில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில், பிகில் படம் வெளியாகிறது. அதனால் தியேட்டர்களோடு போட்டி போட்டு, ஒரே படத்தை ரிலீஸ் செய்ய தியேட்டர் நிர்வாகம் விரும்பவில்லை. அதனால், நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியாகும் கைதி திரைப்படத்தை வெளியிட உள்ளோம் என கூறியுள்ளனர்.
மேலும், நடிகர் விஜய் அல்லது அஜித் படம் வெளியானால், அவரது ரசிகர்களின் ஆர்ப்பாட்டம், அடாவடித்தனம் தானாக முடியவில்லை என்றும், இதனால், சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது என்றும், தியேட்டரில் உள்ள இருக்கைகளை சேதப்படுத்தி விடுகின்றனர் என்றும் கூறியுள்ளனர். இவற்றை சரிசெய்ய தியேட்டர் நிர்வாகம் பெரிய அளவில் செலவு செய்ய வேண்டி உள்ளது. இதனாலேயே விஜய், அஜித் படங்களை தருகிறோம் என தியேட்டர் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
Anant Ambani Chicken
Kachchatheevu - MKStalin
K. C. Venugopal
Kachchatheevu - BJP
a RASA - Sekar Babu
krishnamachari srikkanth ravichandran ashwin