நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கனெக்ட்’ திரைப்படத்தை இடைவேளை இன்றி வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு.
நடிகை நயன்தாரா தற்போது நடித்துமுடித்துள்ள திரைப்படம் ‘கனெக்ட்’. இந்த திரைப்படத்தை, இதற்கு முன்பு நயன்தாராவை வைத்து மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். படத்தை விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.
இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது படம் வெளியாவது சிறிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆம், திரையரங்கு உரிமையாளர்கள் இந்த ‘கனெக்ட்’ படத்திற்குகடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இதையும் படியுங்களேன்- கம்பேக் கொடுக்க நினைத்து இப்படி ஆகிவிட்டதே…கடும் சோகத்தில் வடிவேலு..!?
ஏனென்றால், இந்த திரைப்படம் சரியாக 99 நிமிடங்கள் இடைவேளை இல்லாமல் ஓடும் படமாக எடுக்கப்பட்டுள்ளது. எனவே, ‘கனெக்ட்’ திரைப்படத்தை இடைவேளை இன்றி வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார்களாம். மேலும், இந்த படத்திற்கு இடைவெளி இல்லை என்பதை பற்றி படக்குழு தங்களுக்கு சொல்லவில்லை எனவும் திரையரங்கு உரிமையாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
திடீரென இப்படி ஒரு சிக்கல் எழுந்துள்ளதால், வரும் டிசம்பர் 22-ஆம் தேதி படம் திட்டமிட்ட படி திரையரங்குகளில், வெளியாகுமா..? இல்லையா..? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. விரைவில் படம் வெளியாவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…