நம் உயிரை காக்கும் மக்களுக்கு இதுதான் நாம் கொடுக்கும் மரியாதை என்றால் ஒரு சமூகமாக நாம் தோற்றுவிட்டோம்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து இந்தியா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் மற்றும் தூய்மை பாணியாளர்கள் மக்களுக்காக வெளியில் இறங்கி பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவர் சைமன் உயிரிழந்தார். அவரது உடலைப் புதைக்கச் சென்ற ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை அண்ணா நகரைச் சேர்ந்த சிலர் கடுமையாகத் தாக்கினர்.
இந்த செயலுக்கு பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், நடிகை காயத்ரி தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘நம் உயிரை காக்கும் மக்களுக்கு இதுதான் நாம் கொடுக்கும் மரியாதை என்றால் ஒரு சமூகமாக நாம் தோற்றுவிட்டோம். நமக்காக டாக்டர் சைமன், டாக்டர் பிரதீப் போன்றோர் செய்த தியாகங்களை நினைவுகூர்வோம். அவர்கள் பாகுபாடு பார்க்கவில்லை. நாமும் பார்க்கக்கூடாது. இது போன்ற ஒரு கடினமான சூழலில் மருத்துவர்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க முடிவுசெய்தால் என்னவாகும் என்று நினைத்துப் பாருங்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…