மலையாள சினிமாவில் ஒரு நல்ல திரைப்படம் வெளியாகிவிட்டது என்றாலே அதனை எல்லா மொழிகளிலும் கொண்டாடுவது உண்டு. குறிப்பாக தமிழ் ரசிகர்கள் பலரும் மலையாள படங்களை விரும்பி பார்ப்பது உண்டு. அந்த வகையில், தற்போது மலையாளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வரும் ‘பிரேமலு’ படத்தை தமிழ் மற்றும் மலையாளம் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த திரைப்படத்தில் சங்கீத் பிரதாப், ஷியாம் மோகன் எம், மீனாட்சி ரவீந்திரன், அகிலா பார்கவன், அல்தாஃப் சலீம், மேத்யூ தாமஸ் ஆகியோருடன் நஸ்லென் கே கஃபூர் மற்றும் மமிதா பைஜு உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். படம் கடந்த 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
படம் நன்றாக இருப்பதன் காரணமாக படத்தை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் எங்கு பார்த்தாலும் நஸ்லென் – மமிதா பைஜூ ஆகியோருடைய ரீல்ஸ் தான் ட்ரெண்டிங்கிலும் இருந்து வருகிறது. வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இன்னும் வெற்றிகரமாக படம் திரையரங்குகளில் ஓடி கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், படத்தை ஓடிடியில் பார்க்கவும் ரசிகர்கள் பலர் ஆவலுடன் காத்துள்ளனர். அவர்களுக்காகவே தற்போது படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இந்த பிரேமலு திரைப்படம் வரும் மார்ச் மாதம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் விரைவில் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…