சந்திரமுகி 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாத நிலையில், படத்தின் தோல்வி குறித்து ராகவா லாரன்ஸ் பேசியுள்ளார்.
சந்திரமுகி 2
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன திரைப்படம் தான் சந்திரமுகி. இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகத்தை இயக்குனர் பி.வாசு ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோரை வைத்து பி வாசு இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்திருந்தார்.
படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பும் இருந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ‘சந்திரமுகி 2 ‘ கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
தோல்வி
சந்திரமுகி 2 திரைப்படம் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. வசூல் ரீதியாக 50 கோடியை கூட இன்னும் தொடவில்லை. இதனால் படக்குழு மிகுந்த ஏமாற்றத்தில் இருக்கிறது. இருப்பினும் படம் இன்னும் பல திரையரங்குகளில் ஓடி கொண்டு இருக்கிறது. படத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ள காரணத்தால் படத்திற்கு ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
தோல்வி குறித்து ராகவா லாரன்ஸ்
சந்திரமுகி 2 திரைப்படம் தோல்வி அடைந்துள்ள நிலையில், கர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் சந்திரமுகி 2 தோல்வி குறித்து பேசியுள்ளார். அதில் பேசிய அவர் ” சந்திரமுகி 2 படத்திற்கு சம்பளம் வாங்கி நான் 4 ஹீரோயின்களுடன் நடித்தேன். என்னுடைய சினிமா வாழ்க்கையில் நான் எல்லா நேரங்களிலும் வெற்றிபெறவில்லை. ஹீரோவாக நடிக்க வருவதற்கு முன்பு நான் சைட் டான்சராக பணியாற்றிக்கொண்டு இருந்தேன்.
அந்த சமயம் நாம் எப்படியாவது மாஸ்டராக வேண்டும் என்று நினைத்தேன். பிறகு இயக்குநராகவும் ஹீரோவாகவும் ஆனேன். கடவுளின் அருளால் எனக்கு இருக்கும் அழகுக்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. ஹிட், ஃப்ளாப் பற்றி நாம் யோசிக்க வேண்டியதில்லை. நம் வேலையை நாம் செய்ய வேண்டும். அதை தான் செய்தேன்” என சூசகமாக சந்திரமுகி 2 திரைப்படம் தோல்வி குறித்து ராகவா லாரன்ஸ் பேசியுள்ளார்.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…