சந்திரமுகி 1 திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பி.வாசு அதனுடைய இரண்டாவது பாகத்தை ராகவலாரன்ஸ் வைத்து எடுத்துள்ளார். இந்த சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடிகை கங்கனா ரனாவத் சந்திரமுகியாக நடித்துள்ளார். மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், வடிவேலு, சுபிக்ஷா கிருஷ்ணன், சிருஷ்டி, ராதிகா சாரதிகுமார், ரவி மரியா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருதுவென்ற எம்.எம். கீரவாணி இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த திரைப்படத்தில் முதன் முதலாக கங்கனா ரனாவத் நடித்துள்ள சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பிரபல நடிகையான சாய்பல்லவியிடம் தான் பேச்சுவார்த்தை நடந்ததாம் பிறகு சாய் பல்லவி நமக்கு செட் ஆகாது என்பது போல நடிக்க மறுத்துவிட்டாராம்.
ஏனென்றால், 2-வது பாகத்தில் நடித்தால் ஜோதிகா அளவிற்கு இல்லை என்று ஒப்பிட்டு பேசுவார்கள் என்பது ஒரு காரணம் மற்றோரு காரணம் படத்தின் கதை அந்த அளவிற்கு இல்லாமல் போனதற்கு கூட சாய் பல்லவி நடிக்க மறுத்திருக்கலாம் என சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது.
இதைப்போல, ஏற்கனவே சீரஞ்சிவி நடிப்பில் வெளியான போலோ ஷங்கர் திரைப்படத்திலும் தமன்னாவுக்கு பதிலாக நடிகை சாய் பல்லவி தான் நடிக்கவிருந்தார். அந்த படம் வசூல் ரீதியாக சரியான விமர்சனத்தை பெறவில்லை எனவே, அதே போலவே சந்திரமுகி 2 படத்திலும் அவர் நடிக்க மறுத்த காரணத்தால் “நல்ல வேலை நீங்க நடிக்க வில்லை” என கூறி வருகிறார்கள்.
மேலும் சந்திரமுகி 2 திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. பலரும் படத்தின் டிரைலர் சுமாராக இருப்பதாக கூறி வருகிறார்கள். இந்த திரைப்படம் வரும் 19-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…