“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி என அழைக்க வேண்டாம், நாங்கள் இருவரும் இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை என்று சாய்ரா பானு கூறியிருக்கிறார்.

AR Rahman - Saira Banu

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், இசையமைப்பாளர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கலைஞர் நோய்வாய்ப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிட்டது. இருப்பினும், வழக்கமான பரிசோதனைக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு 29 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிந்து வாழ்வதாக, கடந்த 2024 நவம்பரில் அறிவித்தனர்.

ஆனால், சாய்ரா பானு இன்று ‘நாங்கள் இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை’ தற்போது பிரிந்து வாழ்கின்றனர் என்று கூறியது ஏ.ஆர்.ரஹ்மான் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அட ஆமாங்க… அவரது மனைவி சாய்ரா பானு, தனது கணவர் ரஹ்மான் விரைவில் குணமடைய வேண்டி ஒரு ஆடியோ செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

அந்த ஆடியோ செய்தியில், தானும் ரஹ்மானும் இன்னும் சட்டப்பூர்வமாகப் பிரியவில்லை என்று சாய்ரா கூறியுள்ளார். அதனால் அவர்கள் இன்னும் கணவன் மனைவிதான். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு ஆஞ்சியோகிராஃபி செய்யப்பட்டதாக செய்தி கிடைத்தது, அவர் இப்போது நலமாக இருக்கிறார். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.

நாங்கள் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை, நாங்கள் இன்னும் கணவன் மனைவி தான். தயவுசெய்து என்னை ‘முன்னாள் மனைவி’ செய்சிகள் என்று அழைக்காதீர்கள். குறிப்பாக அவரது குடும்பத்தினருக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன், தயவுசெய்து அவரை அதிக மன அழுத்தத்திற்கு ஆளாக்காதீர்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்