தவறான படங்களை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பி வருகிறோம்… இசையமைப்பாளர் ‘ஏ.ஆர்.ரஹ்மான்’ கருத்து…!
சினிமா உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுவை வாங்குவது என்பது சினிமா துறையில் இருக்கும் பிரபலங்களின் கனவு என்றே கூறலாம். இந்த ஆஸ்கர் விருதை கடந்த 14-ஆண்டுகளுக்கு முன்பு இசையமைப்பாளர் இரண்டு விருதுகளை வாங்கி இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருந்தார் என்றே கூறலாம்.
அவரை தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த 95-வது ஆஸ்கர் விருது விழாவில் ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காக, ஒரிஜினல் பாடல் பிரிவில் இசையமைப்பாளர் கீரவாணி பெற்றிருந்தார். இந்த நிலையில், வயலின் இசை ஜாம்பவான், டாக்டர் எல்.சுப்ரமணியத்துடனான பேட்டி ஒன்றில் ஆஸ்கர் விருதை பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான் “‘ஆஸ்கர் விருதுக்கு தவறான படங்களை இந்தியாவில் இருந்து அனுப்பி வருகிறோம், அதனால்தான் நமக்கு விருது கிடைப்பதில்லை: மேற்கத்திய பார்வையில் இருந்து படங்களை தேர்வு செய்து ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படத்திற்கும், ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் லால் சலாம் ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவருடைய இசையில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல வரும் 30-ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.