சிவகார்த்திகேயனுக்கு படம் பண்றோம்…இயக்குநர் பெரிய ஆளு..டிவிஸ்ட் வைத்த அர்ச்சனா!

சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு கூட்டணி இந்த படத்தில் இணையவேண்டும் என ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

archana kalpathi sivakarthikeyan

சென்னை : பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் கடைசியாக விஜயின் கோட் படத்தை தயாரித்திருந்தது. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரிய லாபத்தையும் கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஏஜிஎஸ் நிறுவனம் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படத்தை தயாரித்துள்ளது.

இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எனவே படம் வெளியாக சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது மும்மரமாக  நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி அடுத்ததாக பெரிய இயக்குனர் ஒருவருடன் படம் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர் “நாங்கள் அடுத்ததாக சிம்பு படம் மற்றும் தனி ஒருவன் 2 படங்களை தயாரிக்கிறோம். சிவகார்த்திகேயன் வைத்து ஒரு படம் எங்களுடைய லைனப்பில் இருக்கிறது. சிவகார்த்திகேயன் வைத்து நாங்கள் தயாரிக்கும் படத்தின் இயக்குனர் பெரிய இயக்குனர் அதனை நான் இப்போது சொல்ல மாட்டேன் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். ஆனால் அந்த இயக்குனர் பெரிய இயக்குனர் என அர்ச்சனா தெரிவித்துள்ளார்.

மேலும் ஏற்கனவே சிவகார்த்திகேயன் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக  தகவல்கள் பரவிக் கொண்டிருந்தது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக வெங்கட் பிரபுவும் பல பேட்டிகளில் கூறியிருந்தார். ஒருவேளை சிவகார்த்திகேயன் ஏஜிஎஸ் நிறுவனம் இணையும் படத்தை வெங்கட் பிரபு தான் இயக்கப்போகிறாரா என்ற கேள்வியும் எழும்பியுள்ளது. ரசிகர்கள் பலரும் இந்த கூட்டணிக்காக தான் காத்திருக்கிறோம் என கூறி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்