வயநாடு நிலச்சரிவு : நிதியுதவி வழங்கிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி!

வயநாடு நிலச்சரிவு : கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த துயரமான சம்பவத்தை தொடர்ந்து வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், நிவாரணப் பணிகளுக்காகவும் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து, சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த நிவாரண தொகையை வழங்கி வருகிறார்கள்.
ஏற்கனவே, விக்ரம், கமல்ஹாசன், பஹத் பாசில் உள்ளிட்ட பிரபலங்கள் வழங்கி இருந்தார்கள். அவர்களை தொடர்ந்து தற்போது நடிகை நயன்தாரா மற்றும் அவருடைய கணவர் விக்னேஷ் சிவன் இருவரும் நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் கொடுப்பதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து வெளியான செய்தி குறிப்பில் ” வயநாட்டில் ஏற்பட்ட சோகமான நிலச்சரிவை அடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் என்ன ஆகும் என்ற எண்ணத்திற்கு எங்கள் இதயம் செல்கிறது. சீரழிவுகளும் இழப்புகளும் நெஞ்சைப் வேதனையட வைத்தது. மிகவும் தேவைப்படும் இந்த நேரத்தில், ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க ஒன்றிணைவதன் முக்கியத்துவத்தை நாங்கள் நினைவுபடுத்துகிறோம்.
ஒற்றுமையின் அடையாளமாக, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உடனடி உதவிகளை வழங்கவும், மறுசீரமைப்புச் செயல்பாட்டில் உதவி செய்யவும் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் வழங்குகிறோம். நமது அரசாங்கம், தன்னார்வத் தொண்டர்கள், மீட்புக் குழுக்கள் மற்றும் பல அமைப்புகளின் ஒருங்கிணைந்த பதிலைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
மீண்டும் கட்டியெழுப்பவும் குணமடையவும் வலிமையிலும் இரக்கத்திலும் ஒன்றுபடுவோம்” என கூறப்பட்டுள்ளது.
மேலும், நிலச்சரிவில் இன்னும் சில சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், 4-வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மண்ணில் புதைந்துள்ள உடல்களை மீட்க ராணுவம், இஸ்ரோ, வனத்துறை, காவல்துறை என பலரும் கைக்கோர்த்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025