குடும்பத்தோடு பாருங்க…”குட்நைட்” படத்தின் டிவிட்டர் விமர்சனம் இதோ.!!

Goodnight Twitter review

ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் மணிகண்டன் அடுத்ததாக விநாயக் சந்திரசேகரன் என்பவர் இயக்கத்தில் “குட்நைட்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தில் மணிகண்டனுடன் மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், பக்ஸ், பாலாஜி சக்திவேல் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.  தூங்கும்போது வரும் குறட்டை பிரச்சனையால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில், படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாக கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில், படத்தை பார்த்துவிட்டு டிவிட்டரில் நெட்டிசன்கள் தெரிவித்துள்ள விமர்சனத்தை பற்றி பார்க்கலாம்.

படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் ” குட்நைட் திரைப்படம்  நல்ல செய்தியுடன் கூடிய நகைச்சுவையான திரைப்படம். மணிகண்டன்  நடிப்பு சிறப்பாக இருந்தது. க்ளைமாக்ஸ் சிரிப்பு வெடித்தது. பொழுதுபோக்கை ஏற்படுத்தும் இந்த படத்தை கண்டிப்பாக  குடும்பத்தோடு பார்க்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

மற்றோருவர் ” குட்நைட் திரைப்படம் அருமையாக இருக்கிறது. முதல் பாதி முழு ஜாலியாகவும், இரண்டாம் பாதி வேடிக்கையாகவும், உணர்ச்சிகரமாகவும், இருக்கிறது. படத்தின் பின்னணி இசை அருமை” என கூறி 3.8/5 ரேட்டிங் கொடுத்துள்ளார்.

மற்றோருவர் ” குட்நைட் 2023 இன் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும். மணிகண்டனும் ரமேஷ் திலக்கும் வரும் காட்சிகள் அருமை. வாழ்க்கையில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களில் இருந்து எடுத்து நகைச்சுவையை கலந்த நாடகத்தை இயக்குனர் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள்” என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்