Categories: சினிமா

சினிமாவை சினிமாவாக மட்டும் பாருங்கள் – நடிகர் விஜய் வேண்டுகோள்

Published by
கெளதம்

சினிமாவை சினிமாவாக பாருங்கள் லியோ வெற்றி வழாவில் நடிகர் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.

லியோ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகவும் பிரமாண்டமாக நடந்தது. இந்த விழாவில் விஜய், த்ரிஷா,லோகேஷ் கனகராஜ், மிஸ்கின், சாண்டி,  மடோனா, அர்ஜுன், கௌதமேனன், ரத்னகுமார்,  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு குட்டி ஸ்டோரி மற்றும் சில அட்வைஸ்களையும் வழங்கினார். அது மட்டும் இல்லமல், லியோ படத்தில் விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றதற்கு பெரிய சர்ச்சையும் எதிர்ப்புகளும் எழுந்தது.

இந்த சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதாவது இது குறித்து விஜய் பேசுகையில், “நான் ரெடிதான்” பாடல் வரிகளை குறிப்பிட்டு, சினிமாவை சினிமாவாக மட்டும் பாருங்கள். “எல்லோருக்கும் தெரியும் படம் என்பது பொழுதுபோக்கானது என்பது என்று, ஹீரோவுக்கும் வில்லனுக்கும் இடையிலான வேறுபாட்டைக் காட்ட உரையாடல்கள் மற்றும் காட்சிகள் மூலம் படத்தில் அவ்வாறு காட்சிகள் அமைக்கப்படுகிறது.

இவ்ளோ கோவம்லாம் உடம்புக்கு நல்லதில்ல – ரசிகர்களுக்கு விஜய் கொடுத்த அட்வைஸ்!

படங்களில் காட்டப்படும் மோசமான விஷயங்களை நீங்கள் செய்ய மாட்டீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் ஒன்றும் சின்ன பசங்க இல்ல…பெரிய பசங்க என்பதால் எது நல்லது, கேட்டது என்று தெரியும் என்று கூறியதோடு, ‘விரல் இடுக்குல தீ பந்தம்’ என்றால் ஏன் நீங்கள் அதை பேனாவாக நினைக்க கூடாது. நான் இது போன்று ஒரு மழுப்ப கூடிய காரணங்களை கூறி என்னால் பேச முடியும்.

சூப்பர் ஸ்டார் ரஜினி.. தல அஜித்.! மேடையில் சர்ப்ரைஸ் கொடுத்த தளபதி விஜய்.!

ஆனால் நான் அதை செய்ய விரும்பவில்லை. சினிமாவை சினிமாவாக பாருங்கள், உலக முழுக்க சினிமாவை அப்படிதான் பார்க்கிறார்கள். சினிமா மக்கள் விரும்பும் பொழுது போக்கு அம்சம் என்று  லியோ வெற்றி வழாவில் நடிகர் விஜய் வேண்டுகோள் வைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுபுள்ளி வைத்தார்.

Published by
கெளதம்

Recent Posts

என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா…அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…

2 hours ago

அம்பேத்கரை இழிவுபடுத்திய கட்சி காங்கிரஸ்! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  அம்பேத்கர்  பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…

3 hours ago

நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…

3 hours ago

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

12 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

14 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

15 hours ago