சினிமாவை சினிமாவாக மட்டும் பாருங்கள் – நடிகர் விஜய் வேண்டுகோள்
சினிமாவை சினிமாவாக பாருங்கள் லியோ வெற்றி வழாவில் நடிகர் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.
லியோ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகவும் பிரமாண்டமாக நடந்தது. இந்த விழாவில் விஜய், த்ரிஷா,லோகேஷ் கனகராஜ், மிஸ்கின், சாண்டி, மடோனா, அர்ஜுன், கௌதமேனன், ரத்னகுமார், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.
இந்த விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு குட்டி ஸ்டோரி மற்றும் சில அட்வைஸ்களையும் வழங்கினார். அது மட்டும் இல்லமல், லியோ படத்தில் விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றதற்கு பெரிய சர்ச்சையும் எதிர்ப்புகளும் எழுந்தது.
இந்த சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதாவது இது குறித்து விஜய் பேசுகையில், “நான் ரெடிதான்” பாடல் வரிகளை குறிப்பிட்டு, சினிமாவை சினிமாவாக மட்டும் பாருங்கள். “எல்லோருக்கும் தெரியும் படம் என்பது பொழுதுபோக்கானது என்பது என்று, ஹீரோவுக்கும் வில்லனுக்கும் இடையிலான வேறுபாட்டைக் காட்ட உரையாடல்கள் மற்றும் காட்சிகள் மூலம் படத்தில் அவ்வாறு காட்சிகள் அமைக்கப்படுகிறது.
இவ்ளோ கோவம்லாம் உடம்புக்கு நல்லதில்ல – ரசிகர்களுக்கு விஜய் கொடுத்த அட்வைஸ்!
படங்களில் காட்டப்படும் மோசமான விஷயங்களை நீங்கள் செய்ய மாட்டீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் ஒன்றும் சின்ன பசங்க இல்ல…பெரிய பசங்க என்பதால் எது நல்லது, கேட்டது என்று தெரியும் என்று கூறியதோடு, ‘விரல் இடுக்குல தீ பந்தம்’ என்றால் ஏன் நீங்கள் அதை பேனாவாக நினைக்க கூடாது. நான் இது போன்று ஒரு மழுப்ப கூடிய காரணங்களை கூறி என்னால் பேச முடியும்.
சூப்பர் ஸ்டார் ரஜினி.. தல அஜித்.! மேடையில் சர்ப்ரைஸ் கொடுத்த தளபதி விஜய்.!
ஆனால் நான் அதை செய்ய விரும்பவில்லை. சினிமாவை சினிமாவாக பாருங்கள், உலக முழுக்க சினிமாவை அப்படிதான் பார்க்கிறார்கள். சினிமா மக்கள் விரும்பும் பொழுது போக்கு அம்சம் என்று லியோ வெற்றி வழாவில் நடிகர் விஜய் வேண்டுகோள் வைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுபுள்ளி வைத்தார்.