ரகசிய கேமரா கண்டுபிடிச்சபோது மோகன் லால் இருந்தாரா? ராதிகா சொன்ன பதில்!

கேரவனில் கேமரா இருந்ததாக தான் அளித்த புகாரை அடுத்து, மோகன் லால் தன்னிடம் தொலைபேசி வாயிலாக விசாரித்த விஷயத்தை பற்றி மௌனம் கலைத்துள்ளார் ராதிகா

radhika sarathkumar about mohanlal

சென்னை : ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானு முதல் தமிழ் மற்றும் மலையாளம் துறைகளில் பணியாற்றி வரும் பல்வேறு நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துண்புறுத்தல் தொடர்பான அனுபவங்களை பொதுவெளியில் பேச ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகை ராதிகா ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

அதாவது, மலையான படம் ஒன்றில் தான் நடித்தபோது, மற்றொரு நடிகை கேரவனில் வைத்து ஆடை மாற்றுவதை ரகசிய கேமரா மூலம் சிலர் பார்த்ததாகவும், இதை பார்த்து தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் குறியிருந்தார். அது மட்டும் இன்றி அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்கு அந்த விஷயத்தை கொண்டு சென்றதாகவும் தெரிவித்திருந்தார்.

பற்றி எரியும், காட்டில் பெட்ரோல் ஊற்றி விட்ட கதயாக நடிகை ராதிகாவின் இந்த குற்றச்சாட்டு மலையாள திரையுலகில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்தான், நடிகர் மோகன் லால், இந்த விவகாரம் தொடர்பாக நடிகை ராதிகாவை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராதிகா, “தான் இந்த விவகாரம் குறித்து பேசிய பிறகு நடிகர் மோகன் லால் தன்னை தொலைப்பேசி வாயிலாக அழைத்து, இந்த சம்பவம் நடந்தபோது நான் அங்கே இருந்தேனா எனவும், மேலும் இது குறித்து கூடுதலாக தன்னிடம் பேசி கேட்டு தெரிந்துகொண்டார் எனவும்” கூறியுள்ளார்.

மேலும் இதற்கு அவரிடம் ராதிகா ” சம்பவம் நடந்தபோது மோகன் லால் உட்பட பெரும் நடிகர்கள் யாரும் அங்கு இருக்கவில்லை எனவும், சிறிய நடிகர்கள் உள்ளிட்ட சிலர் மட்டுமே அங்கு இருந்ததாகவும் கூறியதுடன் சம்பவம் குறித்து விளக்கம் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்”.

இந்த விவகாரத்தில் மோகன் லால் ஏன் ராதிகாவை அழத்துப்பேச வேண்டும்? கடந்த 2019ஆம் ஆண்டு நடிகர் மோகன் லால் நடிப்பில் வெளியான இட்டிமணி made in china என்ற மலையாளப் படத்தில் நடிகை ராதிகாவும் நடித்துள்ளார். இவரை தவரி ஹனி ரோஸ், மதுரி பிரகன்சா, கோமல் ஷர்மா உள்ளிட்ட பல பெண் நடிகைகள் நடித்துள்ளனர். இதனால் கூட நடிகர் மோகன் லால் ராதிகாவை தொடர்பு கொண்டு பேசி இருக்கலாம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்