மறுபடியும் முதல்ல இருந்தா? இம்சை அரசன் 24 புலிகேசி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவக்கம்!
காமெடி நடிகர் வடிவேலு கதாநாயகனாக, நடித்து 2006-ம் ஆண்டு வெளியான இம்சை அரசன் 23-ம் புலிகேசி, படத்தின் இரண்டாம் பாகத்தை, ‘ இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் எடுக்க முடிவெடுக்கப்பட்டு, இயக்குனர் சங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், நடிகர் வடிவேலுவே இப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், சில பிரச்சனைகளின் காரணமாக இப்படம் நின்று போனது. இதனால் பல கோடிகள் நஷ்டமானது.
இதனையடுத்து, இயக்குனர் சங்கர் மற்றும் சிம்பு தேவன் மற்ற படங்களில் பிஸியாகிவிட்டனர். இதனையடுத்து, தற்போது படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்துள்ள நிலையில், மீண்டும் இப்படம் முதலிருந்து எடுக்கப்படவுள்ளதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Dear Friends.. our new journey.. with all your love and support!!
Thanks @vp_offl bro!! ????????????@tridentartsoffl and my whole team & friends! ???????????????????? pic.twitter.com/0NJir3FaAV— Chimbu Deven (@chimbu_deven) May 20, 2019