சிறகடிக்க ஆசை சீரியல்.. முத்துவிடம் வசமாக மாட்டிய மனோஜ்..!

manoj shruthi

சிறகடிக்க ஆசை இன்று– சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[ஜூலை 9] எபிசோடு எப்படி இருக்கும் என இங்கே  காணலாம்.

பாட்டி தன்னுடைய 80 வயது கடந்து வந்த அனுபவத்தை பற்றி பேசுறாங்க.. இதைக் கேட்டு எல்லாருமே  நல்லா பேசி இருக்கீங்க பாட்டி என்று பாராட்டுறாங்க..  பாட்டி இது ஒரு மோட்டிவேஷனல் வீடியோ மாதிரி இருக்குன்னு ஸ்ருதி  சொல்றாங்க. . மீனா இத எனக்கு அனுப்பி வைங்கன்னு சொல்றாங்க.. பாட்டி ஒவ்வொருத்தரையும் தனக்கு கொடுத்த கிப்ட்  பத்தி சொல்லி  எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அப்படின்னு சொல்றாங்க..

காசு பணத்தை விட உறவுகள் தான் முக்கியம் என்று முத்து புரிய வச்சிட்டான். மீனாவும்  நினைவுகள் தான் முக்கியம்னு  காமுச்சுட்டா  இவங்க எனக்கு உணவு பூர்வமா பரிசு  கொடுத்திருக்கிறார்கள் அப்படின்னு  ரெண்டு பேரையும் பாராட்டுறாங்க. இப்ப விஜயாவை கூப்பிட்டு விஜயா என்னோட பேக்  எடுத்துட்டு வா அப்படின்னு சொல்றாங்க விஜயாவும் தனக்கு தான் அந்த கிப்ட் வரப்போகுதுன்னு சந்தோசமா  எடுத்துட்டு வந்து குடுக்குறாங்க.

அந்த பேக்ல இருந்து ஒரு  நகை பாக்ஸ் எடுக்குறாங்க.. அதுக்குள்ள ஒரு டாலர் இருக்குது அத பத்தி பேசுறாங்க இந்த டாலர் ஆறு தலைமுறையா நம்ம கிட்ட இருக்கு.. இப்போ அண்ணாமலை சொல்றாரு அம்மா எனக்கு தெரியுமா நீங்க இதத்தான் பரிசா கொடுக்க போறீங்க அப்படின்னு  இது உங்ககிட்ட இருக்கட்டுமா..

manoj rohini

இல்லப்பா இது அடுத்த தலைமுறைக்கு நம்ம கொடுக்கணும் அப்படின்னு பாட்டி சொல்லிவிட்டு இதை நான் முத்துக்கு மீனாவுக்கும் கொடுக்கிறேன் சொல்லிடுறாங்க. ரவி ஸ்ருதி மட்டும்  சந்தோசமா கைத்தட்டுறாங்க   மத்த எல்லாருக்குமே வயிறு எரியுது. முத்துவும் மீனாவும் பாட்டிகிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு அந்த டாலரை வாங்கிக்கிறாங்க .

இப்போ பாட்டி சொல்றாங்க இந்த டாலரை நீங்க வருஷத்துக்கு ஒரு முறை குலதெய்வம் கோயில்ல வச்சு சாங்கியம் எல்லாம் செய்யணும். தினமும் இதுக்கு பூஜை பண்ணி பத்திரமா பாத்துக்கணும் சொல்றாங்க .ரெண்டு பேருமே சரின்னு வாங்கிட்டு ரூமுக்கு போயிடறாங்க. இப்போ முத்து மீனா கிட்ட இத நீ பத்திரமா பாத்துக்கோ தினமும் பூஜை பண்ணிட்டு பீரோல  எடுத்து வச்சுக்கோ ஏன்னா நம்ம வீட்ல எந்த நகையுமே வைக்க முடியாது.

மனோஜ் கிட்ட இருந்து இத காப்பாற்றுவதே பெரிய விஷயம் அப்படின்னு சொல்றாரு மீனாவும் சரின்னு சொல்றாங்க . இப்போ மறுநாள் காலையில பாட்டி ஊருக்கு கிளம்பிட்டாங்க போற வழியில முத்து கிட்ட பாட்டி கேக்குறாங்க உனக்கும் மீனாவுக்கும் ஏதாவது சண்டையா ஏன் உங்க ரெண்டு பேரு முகமும்  சரியில்ல . முத்து சொல்றாரு ஒன்னுல பாட்டி உங்களுக்கு நான் ஒரு நகை வாங்கி கொடுக்கலாம்னு  இருந்தேன் அது முடியல.

muthu (1)

எனக்கு எதுக்குடா .. நீ உன் பொண்டாட்டிக்கு வாங்கி கொடு அப்படின்னு சொல்றாங்க.  அது மட்டும் இல்ல உனக்கு இன்னொரு ஒரு கடமையும் இருக்கு சீதாவுக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து நீ தான் கல்யாணம் பண்ணி  வைக்கணும் அப்படின்னு சொல்றாங்க  முத்துவும் அதுக்கு சரின்னு சொல்றாங்க. இப்போ பாட்டியை விட்டுட்டு முத்து வீட்டுகுள்ள கோபமா வராரு.

வந்தவரு  கதவை லாக் பண்ணிடுறாரு இப்போ ரோகிணியும் மனோஜும் வேலைக்கு கிளம்பி வராங்க. மனோஜ் கேக்குறாரு ஏன்டா கதவை லாக் எல்லாம் பண்ற நாங்க வேலைக்கு கிளம்பனும் சொல்றாரு ..அதுக்கு முத்து  சொல்றாரு ஒரு பஞ்சாயத்து இருக்கு  அதை  தீர்த்துட்டு தான் யாரா இருந்தாலும் வெளில போகணும் அப்படின்னு சொல்றாங்க. இப்போ மீனாவ நகையை எடுத்துட்டு வான்னு சொல்றாரு .

மீனா எடுத்துட்டு வந்து கொடுக்குறாங்க. அண்ணாமலை கிட்ட இதை காட்டி நகைக்கடையில நடந்த விஷயத்தை எல்லாத்தையுமே முத்து  சொல்லிடுவாரு. அப்போ அண்ணாமலையும் ரவியும் சொல்றாங்க  நீ அன்னைக்கே சொல்லி இருக்கலாம் இல்லடா அப்படின்னு கேக்குறாங்க .அதுக்கு மீனா , இல்ல மாமா பாட்டிக்கு பிறந்தநாள் இருந்துச்சு அதனால நல்லபடியா கொண்டாடணும் இதனால ஒரு பிரச்சனை வேண்டாம் என்று தான் சொல்லல.

Ravi shruthi

இப்போ அண்ணாமலை விஜயா கிட்ட இது என்ன  அப்படின்னு கேக்குறாங்க. விஜயா ரொம்ப அசால்டா என்னன்னு என்கிட்ட கேட்டா எனக்கு எப்படி தெரியும் அவ நகையை கழட்டி கொடுத்தா நான் வாங்கி  வச்சேன். கல்யாணத்துக்கு போட்டப்பவே கவரிங் நகை போட்டாங்களா என்னமோ அப்படி என்ற மாதிரி சொல்றாங்க .அதோட இன்னைக்கு கூட எபிசோடு முடிந்தது.

நாளைக்கு ப்ரோமோல   சுருதி மனோஜ்க்கு கால் பண்ணி வாய்ஸ் மாத்தி பேசுறாங்க ..சார் நீங்க வாங்கிட்டு போன நகையை பத்தி ஃபீட்பேக் சொல்லுங்க அப்படின்னு நகைக்கடையில் இருந்து பேசுற மாதிரி பேசுறாங்க.. மனோஜ் ஃபர்ஸ்ட் நானா அப்படினு   இழுக்குறாரு அப்புறம் சொல்லுங்க மேடம் அப்படின்னு ஆரம்பிக்கிறாரு .மனோஜ் கண்டிப்பா உளற போறாரு .. மாட்டவும்  போறாரு ..வரப்போற எபிசோடுல  என்ன நடக்க போகுதுன்னு பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts