ஷாருக்கான் நடிப்பில் வெளியான ’பதான்’ திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் நடித்ததிரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது என்பதால் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோன் நடித்திருந்தார். அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் 8,000 திரையரங்குகளில் வெளியானது.
படம் சமீபத்தில் தான் 1,000 கோடி வசூலை கடந்தது. இந்த நிலையில், 1,000 கோடி வசூலை கடந்ததை கொண்டாடும் விதத்தில் படத்தின் டிக்கெட் விலை இன்று 1 நாள் மட்டும் ரூ.110 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இந்த விலையில் தான் டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது.
இந்த அசத்தலான அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் ஷாருக்கான் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…