மலையாள சினிமாவில் பிரபல நடிகரான ஷைன் டாம் சாக்கோ சமீபத்தில் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், ஷைன் டாம் சாக்கோ “பாரத சர்க்கஸ்” எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதனைமுன்னிட்டு படத்திற்கான ப்ரோமோஷனுக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷைன் டாம் சாக்கோ ஏர் இந்தியா விமானத்தில் துபாய் சென்றார். அப்போது விமானத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஷைன் டாம் சாக்கோ விமானிகள் அறைக்குள் செல்ல முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த விமான ஊழியர்கள் குடிவரவு அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்த தகவலை அவர்களிடம் கூறியுள்ளனர்.
பிறகு அந்த இடத்திற்கு சென்று , அதிகாரிகள் ஷைன் டாம் சாக்கோவை விமானத்தில் இருந்து கீழே இறக்கி சென்று விசாரணைக்காக அழைத்து சென்றனர். அதனை தொடர்ந்து, அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் மதுபோதையில் இருக்கிறார் என்பது தெரியவந்தது.
இதையும் படியுங்களேன்- கொஞ்சம் ஹாட்டு..நிறைய அழகு.! மாநாடு ஹீரோயினின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.!
அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியபோது, ஷைன் டாம் சாக்கோ கூறியதாவது ” எனக்கு விமானி அறையை பார்க்கவேண்டும் என்று ஆசை இருக்கிறது. அதைப்பார்த்து விட்டு என்னுடைய போனில் ஒரு புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட வேண்டும் அதனால் தான் இப்படி செய்தேன்” என்று கூறியுள்ளார். விசாரணை முடிந்த பிறகு, ஷைன் டாம் சாக்கோ அதிகாரிகள் இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் என” அடுத்த விமானத்தில் அவரை அனுப்பிவைத்தனர்.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…