உனக்காக காத்திருப்பேன்! முகனின் காதலி இவர்தானா?
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 62 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 9 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபிராமி, முகன் மீது காதல் வயப்பட்ட நிலையில், முகன் தான் வெளியில் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து, இவர்கள் இருக்கும் இடையே சில பிரச்சனைகள் மற்றும் வாக்குவாதங்கள் நடைபெற்றது.
இந்நிலையில், தற்போது முகன் தனது காதலியுடன் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.