மகாராஜா : சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் பலருக்கும் 50 -வது படம் ஹிட் படமாக அமைய வேண்டும் என்று ஆசைப்படுவது உண்டு. பலருக்கும் 50 வது படம் ஹிட் படமாக அமைவது இல்லை ஆனால், விஜய் சேதுபதிக்கு அவருடைய 50வது படமான ‘மகாராஜா’ படம் பெரிய ஹிட் படமாக அமையும் என தெரிகிறது. அந்த அளவுக்கு இந்த படம் மக்களுக்கு மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த மகாராஜா திரைப்படத்தினை இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கி உள்ளார். அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், பாரதிராஜா, முனிஷ்காந்த், தேனப்பன் பி.எல்., நடராஜ சுப்ரமணியன், சிங்கம்புலி, அருள்தாஸ், மணிகண்டன், வினோத் சாகர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்தினை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூன் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. படத்தினை பார்த்துவிட்டு படம் நன்றாக இருப்பதாக மக்கள் விமர்சனங்களை கூறி வரும் சூழலில், படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் டிவிட்டரில் தெரிவித்துள்ள விமர்சனங்களை பற்றி பார்க்கலாம்.
படத்தை பார்த்துவிட்டு ஒருவர் ” மகாராஜா படத்தை சினிமா என்று நாம் அழைக்கலாம். படத்தில் விஜய் சேதுபதி நடிப்பு மிகவும் அருமை. அற்புதமான திரைக்கதை மற்றும் மறக்க முடியாத இசையுடன் இந்த ஆண்டின் சிறந்த படம். விஜய் சேதுபதி சினிமா கேரியரில் ஒரு மறக்க முடியாத படமாக இது இருக்கும்” எனவும் பதிவிட்டுள்ளார்.
மற்றோருவர் ” மகாராஜா பிரமிக்க வைக்கும் மற்றும் விதிவிலக்கான ஒரு திரைப்படம். விஜய் சேதுபதியின் நடிப்பு தான் படத்திற்கு பெரிய பலம். படத்தில் நடித்த அனைவரின் அற்புதமான நடிப்பு மற்றும் கலகலப்பான நடிப்பு அருமையாக இருக்கிறது. படத்தின் இசையும் அருமையாக இருக்கிறது” எனவும் கூறியுள்ளார்.
மற்றோருவர் ” மகாராஜா படம் நன்றாக இருக்கிறது. நகைச்சுவையிலிருந்து த்ரில்லராக மாறுவது பார்க்கும்போது மிகவும் அருமையாக இருக்கிறது. வழக்கம் போல விஜய் சேதுபதியின் நடிப்பு படத்தில் அருமையாக இருக்கிறது” எனவும் கூறியுள்ளார்.
மற்றோருவர் ” மகாராஜா படம் பக்கா எழுத்து அடிப்படையிலான திரைப்படம். இந்த படத்தின் மூலம் விஜய் சேதுபதி மீண்டும் மக்கள் செல்வன் என்று நிரூபித்துள்ளார். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் நட்டி நடிப்பு மிகவும் அருமையாக இருந்தது” எனவும் கூறியுள்ளார்.
மற்றோருவர் “மகாராஜா படம் நிச்சியமாக வின்னர் என்று தான் கூறவேண்டும். அந்த அளவுக்கு படம் அருமையாக இருக்கிறது. விஜய் சேதுபதியின் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது. இயக்குனருக்கு பாராட்டுக்கள்” என கூறியுள்ளார்.
மற்றோருவர் ” படம் நன்றாக இருக்கிறது. விஜய் சேதுபதியின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. அனுராக் காஷ்யப் கதாபாத்திரம் படத்தில் குறைவான நேரத்தில் வந்தால் கூட, ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். மஹாராஜா கட்டாயம் பார்க்க வேண்டிய படம்” என பதிவிட்டுள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…