Rio Raj - JOE [file image]
நடிகர் சிவகார்த்திகேயனை போல சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் VJ ரியோ. தற்போது வெள்ளித்திரையில் திரைப்படங்களில் நடிக்க கமிட் தொடங்கிவிட்டார். அந்த வகையில், இவருடைய நடிப்பில் வெளியான ஜோ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை காதலர்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டு திரையரங்குகளுக்கு சென்று கண்டு கழித்து வருகிறார்கள்.
சமீபத்தில், இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் சிவகார்திகேயன் ரியோ ராஜை நேரில் அழைத்து பாராட்டினார். இதனை தொடர்ந்து பல திரை விமர்சகர்கள் தங்களது வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். இதனால் உற்சாகம் பெற்றிருக்கும் ரியோ, தொடர்ந்து சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளாராம்.
இந்த ஆண்டு வெளியான ஃபில் குட் திரைப்படங்களின் சித்தா, குட் நைட், போர்த்தொழில் ஆகிய படங்களின் பட்டியலில் ஜோ படமும் இடம்பெறும் என்றே கூறலாம். அந்த அளவுக்கு ஒரு நல்ல படத்தை ஹரிஹரன் ராம் கொடுத்துள்ளார்.
இந்த திரைப்படத்தினை ஹரிஹரன் ராம் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் தான் ஹரிஹரன் ராம்-க்கு முதல் திரைப்படம் இந்த படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமாகிறார்.
படத்தில் ரியோவுக்கு ஜோடியாக ளவிகா மனோஜ், பவ்யா திரிகா ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கான ட்ரைலர் வெளியாகி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்த நிலையில், படமும் கடந்த 24-ஆம் தேதி வெளியானது.
காதலர்கள் கொண்டாடி தீர்க்க வந்துவிட்டது ‘ஜோ’.! மனதை உருக்கும் திரை விமர்சனம் இதோ…
இதற்கிடையில், படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று நல்ல தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் வாங்கியுள்ளது. விரைவில் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற தேதியை படக்குழு அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…