தொகுப்பாளராக கலக்கி வந்த விஜே மகேஸ்வரி பிக் பாஸ் 6-வது சீசனில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 35 நாட்களுக்கு மேலாக அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விளையாடி வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து வெளியேறினார்.
வீட்டை விட்டு வெளிய வந்தவுடன் விஜே மகேஸ்வரி நெகிழ்ச்சியாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் ” பிக் பாஸ் 6-ல் இருந்து வெளியேற்றப்பட்டதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. எனது 100% விளையாட்டை கொடுத்தேன்.வெளியே வந்தவுடன், எனக்கு எவ்வளவு ஆதரவு இருந்தது என்பதை உணர்ந்தேன். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி” என தெரிவித்திருந்தார்.
அவருடைய ரசிகர்களுக்கு சோகம் என்னவென்றால், இன்னும் கொஞ்ச நாட்கள் மகேஸ்வரி வீட்டில் இருந்திருக்கலாம் என்பது தான். மேலும் அவர் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் அவர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்பபோம்.
இதையும் படியுங்களேன்- லவ் டுடே தயாரிப்பாளருக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட்… 10 நாளில் 50 கோடி.. பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.?
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் 35 நாட்கள் இருந்த அவர் இந்த நிகழ்ச்சிக்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக 8 லட்சம் வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.ஒரு நாளைக்கு 23 ஆயிரம் என்ற கணக்கில் அவருக்கு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…