நிறைய பேர் ஏமாத்திட்டாங்க! நடிகை ஓவியா வேதனை!

oviya sad

ஓவியா : தமிழ் சினிமாவில் விமலுக்கு ஜோடியாக களவாணி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஓவியா. இந்த திரைப்படத்தை தொடர்ந்து மன்மதன் அம்பு, கலகலப்பு, மூடர் கூடம், யாமிருக்க பயமே, மத யானை கூட்டம் உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்தது முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டு இருக்கிறார்.

இதற்கிடையில், நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராகவும் கலந்து கொண்டதன் மூலம் தான் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார் என்றே சொல்லலாம். நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, ஓவியா பெரும் சர்ச்சைகளைச் சந்தித்தார். இருப்பினும், ஓவியாவுக்கு இந்த நிகழ்ச்சி தான் மேலும் புகழைக் கொண்டு வந்தது.

எப்போதுமே தன்னுடைய மனதில் படும் விஷயங்களையும், தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கும் ஓவியா மனம் திறந்து பதில் அளித்து விடுவார். இது அவருடைய ரசிகர்களும் நன்றாகவே தெரியும். அப்படி தான், சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஓவியா தன்னை சிலர் காதலித்து ஏமாற்றிவிட்டதாக வேதனையுடன் பேசியுள்ளார்.

oviya
oviya [file image]
இது குறித்து பேசிய நடிகை ஓவியா ” நானும் காதலித்து இருக்கிறேன். பலர் என்னை ஏமாற்றி இருக்கிறார்கள். பல உறவில் இருந்த்தும் ஒரு உறவு கூட உண்மையாக நீடிக்கவில்லை. இந்த விஷயம் மட்டுமின்றி, மேலும் சிலர் என்னை  பணத்திலும் ஏமாற்றியுள்ளனர். என்னுடைய பணத்தை என்னிடம் இருந்தே ஏமாற்றி வாங்கி இருக்கிறார்கள்.

என்னை பொறுத்தவரை ஒன்றாக வாழும் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. நம்பிக்கை இருப்பவர்கள் யோசித்து கொள்ளுங்கள். உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதனை மட்டும் செய்துகொண்டே இருங்கள். தனிப்பட்ட விஷயத்துக்காக யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது எல்லாருக்கும் சொல்லும் விஷயம் இது மட்டும் தான்” எனவும் ஓவியா கூறியுள்ளார். ஓவியா சற்று வேதனையுடன் பேசியதை பார்த்த ரசிகர்கள் கவலை படாதீங்க என அவருக்கு தங்களுடைய ஆறுதல்களை தெரிவித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்