Vadivelu: நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி வடிவேலுவின்டம் இருக்கும் குறைகளை தனியார் ஊடகம் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகர் வடிவேலு உடன் நடித்த சக நடிகர்கள் அண்மை காலமாக, வடிவேலுவின் நடவடிக்கைகள் குறித்து கடுமையாக விமர்சனங்கள் செய்துள்ளனர். வடிவேலு தனது சக நடிகர்களை முன்னேற விடாமல் தடுப்பதாகவும், இந்த நடவடிக்கைகளால் சினிமா துரை எவ்வாறு இயங்குகிறது? அது எவ்வளவு போட்டித்தன்மை வாய்ந்தது என்று எடுத்துக்காட்டுகிறது.
அந்த வகையில், வடிவேலுவை பற்றி நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியும் குறை கூறியுள்ளார். காவிய தலைவன், கடவுளுக்கு நற்றிணை, ஐந்து தலைமுறை சித்த வைத்திய சிகாமணி போன்ற படங்களில் நடித்துள்ள நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித், வடிவேலு மற்றும் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
அவரை பற்றி சமீபத்திய ஊடக ஒன்றில் பேசிய கொட்டாச்சி, “வடிவேலு தன்னை விட சிறந்தவராக யாரும் வைந்துவிட என்பதற்காக திரையில் எனது வளர்ச்சியை வேண்டுமென்றே தடைசெய்ததாக ஆவேசமாக பேசியுள்ளார்.
வடிவேலுக்கென தனி டீம் இருக்கு, யாரெல்லாம் அவருக்கு கை தட்டுறாங்களோ அவங்கள மட்டும் கூட வச்சிப்பாரு. ப்ரண்ட்ஸ் படத்தில் என்னை நடிக்க சித்திக் சார் கூப்பிட்டதால் நான் சென்றேன். இதே அந்த படத்தில் வடிவேலு கூப்பிடுவாரா? அதாவது விவேக் சார் உடன் இருக்கும் சக நடிகர்களை வடிவேலு நடிக்கும் படத்தில் அழைக்கமாட்டார்.
ஆனால, விவேக் சார் அப்படி இல்லை. வடிவேலு உடன் இருக்கும்சக நடிகர்களை தனது படத்தில் நடிக்க அழைப்பார். இந்த மாதிரி நல்ல உள்ளம் கொண்டவர் நடிகர் விவேக், வடிவேலு அப்படி இல்லை. யாராவது தன்னை விட சிறந்ததாக நடிப்பதாக தெரிந்தால் அதை மாற்றி விடுவார் என ஆவேசமாக கூறிஉள்ளார் நடிகர் கொட்டாச்சி.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…