விசுவாசம் படத்தின் நடன கலைஞர் உயிரிழப்பு…!!! நடிகர் அஜித் நிதியுதவி…!!!
நடிகர் அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள விசுவாசம் படமானது வருகிற பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. இந்நிலையில் இதற்கான பாடல்காட்சி புனேயில் எடுக்கப்பட்டது. அப்போது ஓவியம் சரவணன் என்ற நடன கலைஞர் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து, புனேயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்துகொண்டு இருக்கும்போதே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்த அஜித் அவருக்கு பிரேத பரிசோதனை முடியும் வரை நடிகர் அஜித் அவருடன் மருத்துவமனையில் இருந்ததாக பட குழுவினர் கூறியுள்ளனர்.
இதனையடுத்து இவரது உடல் புனேயிலிருந்து, சென்னை செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அஜித் அவர்களே செய்துள்ளார். இதனை மிகவும் நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார்கள் படக்குழுவினர். மேலும் சரவணனின் குடும்பத்திற்கு நிதியுதவி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
source : tamil.cinebar.in