தமிழகத்தில் இன்று வரை வசூலில் விஸ்வாசம் தான் முதலிடம்!!!!
தமிழகத்தில் பேட்ட, விஸ்வாசம் படங்கள் கடும் போட்டிக்கு நடுவே கடந்த 10 ந் தேதி உலகமெங்கும் திரைக்கு வந்து மாபெரும் சாதனை படைத்தது. மேலும் இந்த இரு படங்களை பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது இந்த இரண்டு படங்களும் வெற்றிகரமாக திரையில் ஓடிகொண்டிருக்கிறது. மேலும் சென்னை பாக்ஸ் ஆபீஸில் பேட்ட படம் முதலிடத்தில் உள்ளது.
ஆனால் தற்போது தமிழகத்தில் நேற்று வரை விஸ்வாசம் ரூ 90 கோடி வரை வசூல் செய்துள்ளது. மேலும் தற்போது தமிழகத்தில் ‘ விஸ்வாசம் ‘ படம் தான் முதலிடத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ‘ பேட்ட ‘ படம் தற்போது வரைக்கும் ரூ 78 கோடி ரூபாயை தமிழகத்தில் வசூல் செய்துள்ளது.