இலங்கையிலும் விஸ்வாசம் தான் முதலிடம் !!!
அஜித் நடித்த படம் ‘ விஸ்வாசம் ‘. இந்த படம் திரைக்கு வந்த நாளை ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடினர். இந்த படம் குடும்ப படம் என்பதால் அதிக மக்களை வெகுவாக கவர்ந்து விட்டது. மேலும் இந்த படம் வெளி வந்த நாளில் தான் ரஜினியின் பேட்ட படமும் வெளி வந்தது. இந்நிலையில் இந்த இரண்டு படங்களும் கடும் போட்டி போட்டு கொண்டன. தமிழகத்தில்’ விஸ்வாசம் ‘ தான் இன்று வரை முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் அஜித்தின் விஸ்வாசம் ரூ 2.23 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. மேலும் ரஜினியின் பேட்ட படம் 2 கோடி தான் வசூல் செய்துள்ளதாம். மேலும் இலங்கையிலும் அஜித் தான் முதலிடத்தில் உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.