விஸ்வாசம் படம் மீண்டும் சென்டிமெண்டில் உருவாகியுள்ளது !!!
சிவா – அஜித் கூட்டணியில் ஏற்கனவே 3 திரைப்படங்கள் உருவாகியுள்ளது. இந்த 3 படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. எனினும் 3 படங்களிலும் ஏதாவது ஒரு சென்டிமெண்ட் கண்டிப்பாக இருக்கும்.
‘ விஸ்வாசம் ‘ படம் ஜனவரி 10 ந் தேதி வெற்றிகரமாக திரைக்கு வந்தது.’ விஸ்வாசம் ‘ படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். மேலும் ‘ விஸ்வாசம் ‘படம் அஜித்-சிவா கூட்டணியில் உருவான 4 -வது திரைப்படம் ஆகும்.
இந்நிலையில் ‘ விஸ்வாசம் ‘ படத்திலும் ஒரு சென்டிமெண்ட் இருக்கிறது. இந்த படத்தில் சிறுத்தை சிவா மகள் சென்டிமெண்ட்டை வைத்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.
மேலும்’ வேதாளம் ‘ படத்தில் தங்கச்சி சென்டிமெண்ட்டை மையமாக வைத்து சிறுத்தை சிவா எடுத்துள்ளார். மேலும் ‘ வீரம் ‘ படத்தில் தம்பி சென்டிமெண்ட் மற்றும் தற்போது விஸ்வாசம் படத்தில் மகள் சென்டிமெண்ட்டை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளது. இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.