நடிகர் சூரி மற்றும் நடிகர் விஸ்ணு விஷால் குடும்பத்திற்கு இடையே நிலமோசடி விவகாரம் தொடர்பாக பிரச்சனை இருந்தது. குறிப்பாக நடிகர் சூரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிலம் வாங்கி தருவதாக கூறி தன்னிடம் இருந்து 2 கோடியே 70 லட்சம் ரூபாய் பணத்தை விஸ்ணு விஷால் மற்றும் அவருடைய தந்தை ஆகியோர் மீது புகார் அளித்து இருந்தார்.
இந்த பிரச்சனை காரணமாக நடிகர் சூரி மற்றும் விஸ்ணு விஷால் இருவரும் பேசிக்கொள்ளாமல் இணைந்து படம் நடிக்காமல் இருந்தனர். இந்த பிரச்சனை என்னதான் ஆச்சு? இருவரும் பிரச்சனைகளை பேசி தீர்த்துக்கொண்டார்களா? என எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனையடுத்து, தற்போது லால் சலாம் படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டிகளில் கலந்துகொண்டு வரும் விஸ்ணு விஷால் சமீபத்திய பேட்டி ஒன்றில் சூரி பற்றி பேசியுள்ளார்.
600 திரையரங்குகளில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஸ்ணு விஷால் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு பேட்டிகளில் கலந்துகொண்டு படம் குறித்து விஸ்ணு விஷால் பேசி வருகிறார். அந்த வகையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம் சூரி ஹீரோவாக நடிக்கும் விஷயம் குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
சூரி குறித்த கேள்விக்கு பதில் அளித்த விஸ்ணு விஷால் ” எனக்கும் சூரிக்கும் சில மனகசப்புகள் இருந்தது. இப்போ அந்த மாதிரி எங்களுக்குள் எந்த பிரச்சனைகளும் இல்லை நாங்கள் பழையபடி நண்பர்களாக மாறிவிட்டோம். சமீபத்தில் அவர் நடித்த படங்களை எல்லாம் நான் பார்த்தேன்.
குறிப்பாக அவருடைய நடிப்பில் சமீபத்தில் கருடன் படத்தில் இருந்து டீசர் ஒன்று வெளியாகி இருந்தது. அதனை பார்த்துவிட்டு நான் அவருக்கு கால் செய்து நீங்க ஹீரோவாக நடிச்சா நாங்கெல்லாம் என்ன பண்றது என்று ஜாலியாக கலாய்த்தேன். அந்த அளவிற்கு நாங்கள் இருவரும் ஒன்றாக இணைந்துவிட்டோம். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இப்போது இல்லை” எனவும் விஸ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…