நடிகர் விஷ்ணு விஷால் தமிழில் “வெண்ணிலா கபடி குழு ” திரைப்படம் மூலம் அறிமுகமாகி அதன் பின் குள்ள நாரி கூட்டம் , நீர்ப்பறவை , ஜீவா , மாவீரன் கிட்டு ,ஆகிய திரைப்படங்களில் நடித்து உள்ளார்.
விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான “ராட்சசன் ” திரைப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பு கிடைத்தது மட்டுமல்லாமல் வசூலில் பல சாதனையை புரிந்தது. தற்போது விஷ்ணு விஷால் “ஜகஜல கில்லாடி “திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜூவாலா கட்டா உடன் இருக்கும் புகைப்படத்தை விஷ்ணு விஷால் வெளியிட ரசிகர்கள் நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்களா? என விஷ்ணு விஷாலிடம் கேள்விகள் எழுப்ப அதற்க்கு பதில் அளித்த விஷ்ணு விஷால் “நாங்கள் இருவரும் நீண்ட நாள்களாக பழகி வருகிறோம்.
மேலும் இருவருக்கும் ஒருவரை ஒருவர் புடிக்கும் அதற்க்கு மேல் எங்களுக்குள் ஒன்றும் இல்லை என கூறினார்.இந்நிலையில் பிரபல பேட்மிட்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா தனது ட்விட்டர் பக்கத்தில் விஷ்ணு விஷால் உடன் நெருக்கமாக இருக்கும் செல்பி புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.
இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விஷ்ணு விஷால் , ஜூவாலா கட்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போகிறார் போல என்று ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
விஷ்ணு விஷால் கடந்த 2011-ம் ஆண்டு ரஜினி நடராஜை திருமண செய்து கொண்டார்.சில கருத்து வேறுபாடு காரணமாக விஷ்ணு விஷால் கடந்த ஆண்டு விவாகரத்து செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…