சென்னையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன், ஹரிஷ் கல்யாண் ஆகியோருக்குப் பிறகு, மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்தை வழங்கியுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.
இதற்கான காசோலையை விஷ்ணு விஷால், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். இதை உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். முன்னதாக, சென்னை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களில் ஒருவராக விஷ்ணு விஷாலும் அந்த வலியை அனுப வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் தனது வீட்டுப் பகுதியில் உள்ள நீர்நிலை மற்றும் தான் சிக்கி தவிப்பதாக தனது X தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அவர் இவ்வாறு சமூக வலைதளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, தமிழக அரசு அலர்ட் செய்திருந்த மீட்பு பணியாளர்கள் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது குடும்பத்தினரை பத்திரமாக மீட்டனர். அவருடன் பாலிவுட் நடிகர் அமீர்கானும் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டார்.
10 நிமிட குறும்படம் இருக்கு! அது தான் LCU-வின் தொடக்கம்- நடிகர் நரேன்!
மீட்புப் பணியைத் தொடர்ந்து, விஷ்ணு விஷால் மீட்பு பணிக்கு உதவிய தமிழக அரசு குறித்தும் , அந்த நேரத்தில் தனக்கு உதவிய நடிகர் அஜித்துக்கு நன்றி தெரிவித்தார். முன்னதாக, தமிழ் சினிமா நடிகர்கள் சூர்யா, ஹரிஷ் கல்யாண் ரூ.1 லட்சம் மற்றும் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் என சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தமிழக அரசுக்கு நிதியுதவி அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…