மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளப்பெருக்கு ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் முடிங்கியுள்ளது. பலரும் தங்குவதற்கு இடம் இல்லாமல் சாப்பிட உணவு இல்லாமல் சிரமத்தில் இருக்கிறார்கள். பல இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பெரும்பாலான சாலை போக்குவரத்து சேதமடைந்துள்ளது.
இப்படியான வெள்ளத்தில் மக்கள் பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என்றும் தங்களால் முடிந்த உதவிகளையும் செய்ய கூறியும் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் செய்துகொடுத்துக்கொண்டும் வருகிறார்கள். குறிப்பாக விஷால், வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா போன்ற பிரபலங்கள் எல்லாம் ‘நிலைமை ரொம்பவே மோசமாக இருக்கு பாதுகாப்பதுடன் இருங்கள் மக்களே’ என அறிவுறுத்தி இருந்தார்கள்.
அவர்களை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் தங்களுடைய பகுதியில் இருப்பவர்களுக்கு உதவி வேண்டும் என்றும், மக்கள் பாதுகாப்புடன் இருங்கள் எனவும் கூறியுள்ளார். வீட்டின் மேல் இருந்து வீடு தண்ணீர்குள் மூழ்கி கொண்டு இருக்கும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது ” காரப்பாக்கத்தில் இருக்கும் என்னுடைய வீட்டில் தண்ணீர் மட்டம் அதிகரித்து வருகிறது. தண்ணீரின் நிலைமை ரொம்பவே மோசமாக உயர்ந்து வருகிறது. நான் உதவி கேட்டு இருக்கிறேன். மின்சாரம் இல்லை வைஃபை இல்லை போன் சிக்னல் இல்லை ஒன்றுமில்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தில் மொட்டை மாடியில் மட்டுமே எனக்கு சில சிக்னல் கிடைக்கிறது எனக்கும் இங்குள்ள பலருக்கும் ஏதாவது உதவி கிடைக்கும் என்று நம்புகிறோம். சென்னை முழுவதும் உள்ள மக்களுக்காக என்னால் உணர முடிகிறது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” எனவும் நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களுக்கு நடிகர் சூர்யா-கார்த்தி முதல்கட்டமாக ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். அது மட்டும் இல்லாமல், தங்களது ரசிகர் மன்றங்கள் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…