இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது, படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள தயாரிப்பு நிறுவனம், இது அதிர்ச்சியளிப்பதாகவும், பயமாகவும் இருக்கிறது என்று தெரிவித்துள்ளது. அதாவது, படப்பிடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்ததால் பெரும் விபத்து ஏற்பட்டது அந்த வீடியோவில் தெளிவாக தெரிகிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இப்பொது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், அந்த வீடியோவில் முக்கிய காட்சி ஒன்று எடுக்கப்பட்டுள்ளது அந்த காட்சியில் விஷால் நடித்து வருகிறீர். அப்போது அவர் பின்னால், லாரி கட்டுப்பாட்டை இழந்து வருவதும் அப்போது, தான் நூலிலையில் உயிர் தப்பியதையும் விஷால் தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில், எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்களேன் – 3-வது திருமணம்.! நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி எடுத்த அதிரடி முடிவு.?
மேலும் இந்த படத்தில், விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா தவிர, மற்ற நடிகர்களான சுனில், ரிது வர்மா, அபிநயா, நிழல்கள் ரவி, ஒய் ஜீ மகேந்திரன் ஆகியோர் அடங்குவர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் வருகின்ற கோடை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…