Vishal: மார்க் ஆண்டனி வெற்றியால் குஷியில் விஷால்! சந்தோஷத்தில் வெளியிட்ட வீடியோ…
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் தொடர்ந்து குவிந்து வருவதால், விஷாலுக்கு இந்த படம் கம்பேக் படமாக அமைந்துள்ளது. மார்க் ஆண்டனி இப்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், நடிகர் விஷால் சமூக வலைத்தளத்தி படத்திற்கு குவியும் பாராட்டுக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
“நான் இதைச் சொல்ல வேண்டியது என்னுடைய கடமை என்று தோணுது, ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்திற்கான ஆதரவை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.
இது ஒரு சம்பாத்தியம் மட்டுமல்ல, மக்கள் படத்தை மனதார ரசித்திருக்கிறார்கள். அதற்கு நன்றி மற்றும் எனது எதிர்கால திரைப்படங்களில் நடிக்கும்போது, இதை என் மனதில் வைத்துக் கொள்வேன், என்று அவர் அந்த வீடியோவில் கூறினார்.
மேலும் படத்தை ஆதரித்த திரையுலகினருக்கும் விஷால் நன்றி தெரிவித்ததோடு, உங்கள் சார்பாக விவசாயிகளுக்கு ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்தும் 1 ரூபாய் கொடுக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன், அதை நான் செய்வேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனியில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, சுனில், ரிது வர்மா, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதி செய்துள்ளார்.