Vishal நடிகர் விஷால் அடிக்கடி சாப்பிடும் போது கடவுளை வணங்கிவிட்டு தான் சாப்பிட்டு வருகிறார். குறிப்பாக படப்பிடிப்பு தளத்தில் சாப்பிடும்போது மேலே பார்த்து கடவுளை வணங்கிவிட்டு சாப்பிட்டு இருந்தார். அவருடன் யோகி பாபுவும் இருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகவும் ட்ரோல் வீடியோவாக மாறியது என்று கூட சொல்லலாம். பலரும் அவரைப்போலவே சாப்பிடும் போது அவரை கலாய்க்கும் விதமாக ரீல்ஸ் செய்து வீடியோவை வெளியீட்டார்கள்.
இந்த நிலையில், தற்போது தான் அதனை 10 வருடமாக செய்து கொண்டு இருக்கிறேன் என கூறி விஷால் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். தற்போது விஷால் இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் முதல் பாடலான ‘DontWorryDaMachi’ பாடலும் சமீபத்தில் வெளியானது.
இந்த பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் காலத்து கொண்ட விஷாலிடம் தான் சாப்பிடுவதற்கு முன் என்ன பண்றீங்க சார்? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” எல்லா சாமியும் ஒண்ணு தான் நான் சாப்பிடுவதற்கு முன்பு அப்படி செய்வது வழக்கமான ஒன்று தான். இதனை பற்றி நிறைய பேர் என்னிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
நான் இதுவரை கடவுளை பார்த்தது இல்லை. நான் பார்த்த முதல் கடவுள் கேமரா தான். அந்த கேமரா முன்னாடி நான் நிற்க போய்தான் எனக்கு சோறு கிடைக்கிறது. நான் எப்போதும் மூன்று மதங்களின் தெய்வங்களையும் சாப்பிடும் போது வணங்குவேன். மற்றபடி நான் இது அரசியலுக்காக எல்லாம் சொல்லவில்லை. என்னை பற்றி இதனை வீடியோவாக எடுத்து போடுபவர்களுக்காக நான் விளக்கம் கொடுக்க தேவை இல்லை” எனவும் நடிகர் விஷால் கூறியுள்ளார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…