என் வாழ்கையில இதெல்லாம் நடக்கும்னு நான் நினைத்து கூட பார்க்கல.. விஷால் பரபரப்பு.!

Vishal

நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி திரையரங்களில் வெளியான திரைப்படம் “மார்க் ஆண்டனி”. இந்த திரைப்படம் இந்தியில் தணிக்கை சான்றிதழ் பெற லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் புகார் அளித்து இருந்தார்.

இந்தியில் மார்க் ஆண்டனி திரைப்படத்தை மொழி மாற்றம் செய்த படத்துக்கு தணிக்கை சான்று வாங்க சென்றபோது ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக மெர்லின் மேனகா, ஜீஜா ராமதாஸ், ராஜன் உள்ளிட்டோர் மீது புகார் கொடுத்திருந்தார்.

பிறகு, செப்டம்பர் 29-ஆம் தேதி விஷாலின் இந்த புகாருக்கு உடனடியாக பதில் அளித்த மத்திய அரசு இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து இருந்தது. இதனையடுத்து, விஷால் அளித்த புகாரின் அடிப்படையில், புகார் தொடர்பாக சிபிஐ விசாரணையை தொடங்கியது.

இந்த விசாரணையில் 2 பெண்கள் உட்பட 3 தரகர்கள் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத சென்சார் போர்டு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட தனி நபர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனையும் சிபிஐ நடத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுத்தமா வரல எல்லாரும் கழுவி ஊத்துனாங்க! சோக கதையை சொன்ன ரோஷினி ஹரிப்ரியன்!

தற்போது, இந்த விவகாரம் தொடர்பாக நடிகர்விஷால் மற்றும் அவருடைய மேலாளர் ஹரி கிருஷ்ணன் மும்பை சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்கள்.மேலும் இது குறித்து தனது X தள பக்கத்தில், “இப்போது சிபிஎஃப்சி வழக்கு தொடர்பான விசாரணைக்காக மும்பையில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்குச் சென்றேன். என் வாழ்நாளில் நான் இந்த அலுவலகத்திற்கு செல்வேன் என்று நினைத்ததில்லை” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live ilayaraja
good bad ugly - gv prakash
India vs New Zealand Final
tvk poster
TVKVijay - TN govt
MKStalin - PINK AUTO
Tvk executives arrested