நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் “விருமன்”. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். கஞ்சா கருப்பு, சூரி, ராஜ்கிரண் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
2 டி நிறுவனம் சார்பில் படத்தை சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி ஏற்கனவே ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதையும் படியுங்களேன்- விக்னேஷ் சிவனிடம் நடிகர் அஜித் சொன்ன விஷயம்.! என்ன தெரியுமா..?
இதனையடுத்து இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றதில் நடைபெறுகிறது. இதற்காக படக்குழுவினர் அனைவரும் தயாராகி மதுரைக்கு வந்துவிட்டனர்.
இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் சூர்யா, இயக்குனர் ஷங்கர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் சில மணி நேரத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழா தொடங்கவுள்ள நிலையில், நிகழ்ச்சி களைகட்டியுள்ளது.
ஆம், ராஜா முத்தையா மன்றத்தில் மேளதாளத்துடன், ரசிகர்கள் பேனர் வைத்து வருகிறார்கள். இது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…