மதுரையை திருவிழாவாக மாற்ற வரும் விருமன்.! நாளை மறுநாள் யுவனின் கிராமத்து இசை விருந்து…

Published by
Castro Murugan

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் “விருமன்”. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். கஞ்சா கருப்பு, சூரி, ராஜ்கிரண் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

2 டி நிறுவனம் சார்பில் படத்தை சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்திலிருந்து ஏற்கனவே முதல் பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படம் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த கார்த்தி ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர்.  இதற்கிடையில், தற்போது படத்தின் டிரைலர் மற்றும் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி விருமன் படத்தின் இசை வெளியீட்டு மற்றும் டிரைலர் வெளியீட்டு  விழா வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றதில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் தற்போது மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் இசையமைத்துள்ளார் என்பதால் படத்தின் பாடல்கள் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. நாளை மறுநாள் யுவனின் கிராமத்து இசை கலந்த பாடல்கள் வெளியாவதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

2 mins ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

14 mins ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

35 mins ago

“நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி.,” கமல்ஹாசன் பேச்சு.!

சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

37 mins ago

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…

55 mins ago

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…

1 hour ago