”ஆல் ஏரியாவிலும் அய்யா கில்லி டா”…ஆந்திராவிலும் மாஸ் காட்டிய தளபதி விஜய்.!
லியோ படப்பிடிப்பு தளத்தில் இருந்து தனது ஆந்திரா ரசிகர்களை சந்தித்தார் தளபதி விஜய்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களுடன் லியோ படம் உருவாகி வருகிறது. லியோ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இம்மாதம் இறுதியில் படப்பிடிப்பு நிறைவடையும் என கூறப்பட்டுள்ளது.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நிறைவு பெற்றது. தற்போது படக்குழு எங்கு இருக்கிறது என தெரிந்துவிட்டது. ஆம்… ஆந்திர பிரதேசத்தின் சித்தூர் மாவட்டம் அருகே உள்ள தலகோனம் அருவியில் லியோ படக்குழு முகாமிட்டுள்ளது.
இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை பார்த்த அம்மாநில ரசிகர்கள் கூட்டம் தளபதி விஜய்யை பார்த்ததும் வெறித்தனமாக கூச்சலிட்டனர். ஆந்திராவிலும் தளபதி ரசிகர்கள் கூட்டத்தை இந்த வீடியோ காமிக்கிறது. தற்போது அந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ….
Thalapathy Today In #LEO Shoot ????
Location : Talakona, AndhraPradesh.#Leo || #Thalapathy68 || @actorvijay pic.twitter.com/uC5S60nQPP
— Telugu Vijay Fansⱽᵃᵃʳᵃˢᵘᵈᵘ (@TeluguVijayFans) June 26, 2023
லியோ:
இந்த திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தில் த்ரிஷா. மன்சூர் அலிகான்,சஞ்சய் தத்,ப்ரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டர், அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன், மேத்யுவ் தாமஸ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.