நடிகர் அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெறவுள்ளன. மீதமுள்ள படப்பிடிப்பை முடிப்பதற்கு நடிகர்கள் மற்றும் குழுவினர் அடுத்த ஓரிரு நாட்களில் அஜர்பைஜான் செல்ல உள்ளனர். இன்னும், க்ளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது.
இதற்கிடையில், சமீபத்தில் திருப்பதி பெருமாள் கோவிலுக்குச் சென்ற அஜித்குமார், தற்போது ரேஸ் காரில் அதிவேகமாக சீறிப்பாயும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித், பைக்கை தாண்டி கார் பந்தயத்திலும் சினிமாவிலும் அதிக ஆர்வம் கொண்டவர்.
குறிப்பாக கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை வென்றிருக்கிறார். ஒரு முறை கார் பந்தயத்தில் விபத்தில் சிக்கி உடல்நிலை சரியில்லாததால் சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் போனது. இதனால் பந்தயத்தை முற்றிலுமாக விட்டுவிட்டு சினிமாவில் மட்டும் நடிக்க ஆரம்பித்தார்.
இந்த நிலையில், நீண்ட நாட்களுக்கு பின் பைக்கில் பயணம் மேற்கொண்டு வந்த நடிகர் அஜித் ரேஸ் காரில் அதிரடியாக பயணம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. புகைப்படங்களில் நடிகர் அஜித் ஸ்டைலிஷ் லுக்கில் காட்சியளிக்கிறார்.
சென்னை : மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மக்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று…
சியாட் : அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை தினமும் வெளியிட்டு வருகிறார்.…
சென்னை : சமீப நாட்களாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தந்தை பெரியார் பற்றி பல்வேறு அவதூறு கருத்துக்களை…
நைபியிடவ் : இன்று (ஜனவரி 24) அதிகாலை 12.53 மணியளவில் மியான்மர் (பர்மா) நாட்டின் ஒரு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக…
அமெரிக்கா : ஆஸ்கார் விருது என்பது திரையுலகின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான விருதுகளில் ஒன்று. தற்போது, 2025 ஆஸ்கர் விருதுகளுக்கான…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசியல் பணிகள் தீவிரமாக நடந்து…