மீண்டும் கார் ரேஸில் களமிறங்கிய அஜித்… சீறி பாயும் காரின் வைரல் வீடியோ.!

Ajith Kumar - race car

நடிகர் அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெறவுள்ளன. மீதமுள்ள படப்பிடிப்பை முடிப்பதற்கு நடிகர்கள் மற்றும் குழுவினர் அடுத்த ஓரிரு நாட்களில் அஜர்பைஜான் செல்ல உள்ளனர். இன்னும், க்ளைமாக்ஸ் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது.

இதற்கிடையில், சமீபத்தில் திருப்பதி பெருமாள் கோவிலுக்குச் சென்ற அஜித்குமார், தற்போது ரேஸ் காரில் அதிவேகமாக சீறிப்பாயும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித், பைக்கை தாண்டி கார் பந்தயத்திலும் சினிமாவிலும் அதிக ஆர்வம் கொண்டவர்.

 

குறிப்பாக கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை வென்றிருக்கிறார். ஒரு முறை கார் பந்தயத்தில் விபத்தில் சிக்கி உடல்நிலை சரியில்லாததால் சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் போனது. இதனால் பந்தயத்தை முற்றிலுமாக விட்டுவிட்டு சினிமாவில் மட்டும் நடிக்க ஆரம்பித்தார்.

 

இந்த நிலையில், நீண்ட நாட்களுக்கு பின் பைக்கில் பயணம் மேற்கொண்டு வந்த நடிகர் அஜித் ரேஸ் காரில் அதிரடியாக பயணம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. புகைப்படங்களில் நடிகர் அஜித் ஸ்டைலிஷ் லுக்கில் காட்சியளிக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்