முடிந்தது ‘விடாமுயற்சி’ ஷூட்டிங்? திடீரென சென்னை திரும்பிய அஜித் குமார்! ஏன் தெரியுமா?

Ajith Kumar - Chennai

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் “விடாமுயற்சி” திரைப்படத்தில் ரெஜினா, திரிஷா, சஞ்சய் தத், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த வருவதாக கூறப்படுகிறது.

அஜித் ரசிகர்கள் அனைவரும் இந்த திரைப்படத்திற்கான அப்டேட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில், ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் பல பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில், கிட்டத்தட்ட ஒன்றரை மாத ஷெட்யூலுக்கு பிறகு சிறிய விடுமுறைக்காக நடிகர் அஜித்குமார் சென்னை திரும்பியுள்ளார்.

சமீபத்தில், முக்கிய ஸ்டண்ட் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது தீபாவளிக்கு கூட, வீடு திரும்பாமல் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வந்தது. அண்மையில் கூட படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில்,அஜர்பைஜானில் முதல் ஷெட்யூலை முடித்துவிட்டு இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் வருகை தந்த நடிகர் அஜித் குமாரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு துபாய் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு சில முக்கியமான காட்சிகள் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் முழு படப்பிடிப்பும் அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாலிவுட் தரத்தில் விடாமுயற்சி படம்! படப்பிடிப்பு தள புகைப்படம் – வீடியோ வெளியீடு!

விடாமுயற்சி

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். படத்தில் அஜித்தை தவிர ரெஜினா, திரிஷா, சஞ்சய் தத், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation