வைரலாகும் புதிய வீடியோ : அஜித் செய்த நெகிழ்ச்சி சம்பவம்.! கண்கலங்கிய தாயார்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பதை தாண்டி மற்ற செயல்பாடுகளுக்கும் ஈடுபட்டு வருகிறார். அவர் விரும்பி செய்யும், பைக் ரேஸ் தவிர துப்பாக்கி சுடுதல் அவருக்கு பிடித்தமான விஷயம் .இதில், துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் கலந்து கொண்டு அதில் பல பரிசுகளையும் இவர் வென்றுள்ளார்.
அந்த வகையில், நேற்று திருச்சியில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்டார். இவர் திருச்சிக்கு வந்ததை அறிந்த ரசிகர்கள் லட்சக்கணக்கானோர் குடும்பத்துடன் அஜித்தை பார்க்க ரைபிள் கிளப்பிற்கு வந்துவிட்டனர்.
பிறகு கூட்டம் தொடர்ந்து அதிகமாக, அனைவரும் AK, தல, என கர கோஷமிட்டனர். இதனை பார்த்த அஜித் ரைபிள் கிளப்மாடிக்கு சென்று ரசிகர்களுக்கு கை அசைத்து முத்தமும் கொடுத்தார். அதற்கான வீடியோவும் , புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.
பிறகு அவர் கீழிறங்கி திரும்பி செல்லும் போது ஒரு பெண்மணி கைக்குழந்தையுடன் வேகமாக அஜித்தை பார்க்க நின்றுள்ளார். உடனே அருகில் ஓடி வந்து அந்த குழந்தையை வாங்கி தான் வைத்துக்கொண்டு, தாய் மற்றும் குழந்தை மற்ற பெண்களுடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டு அனுப்பி வைத்தார் அஜித். இதனை பார்த்த அந்த அம்மா கண்கலங்கியுள்ளார். அதற்கான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கை குழந்தையுடன் வெளியில் காத்திருந்த பெண்.
உள்ளே அழைத்து போட்டோ எடுத்து நலம் விசாரித்து அனுப்பிய அஜித். pic.twitter.com/DUvzYBXlKc— குருவியார் (@Kuruviyaaroffl) July 27, 2022