வினோதய சித்தம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளதாம். அதில், பவன் கல்யாண், மோகன்லால் நடிக்க உள்ளாராம். சமுத்திரக்கனியே அங்கும் இயக்க இருக்கிறாராம்.
சமுத்திரக்கனி நடித்து இயக்கி ஜீ தமிழ் OTTயில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் வினோதய சித்தம். வெகு நாட்கள் கழித்து சாமுத்திரிகனி ஒரு நல்ல படத்தை மீண்டும் திரையுலகிற்கு கொடுத்துள்ளார் என திரையுலகம் பாராட்டியது. இந்த படத்தில் தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.
இந்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய பலர் முயன்று வருகின்றனர். அதிலும், தெலுங்கு ரீமேக் பற்றி தமிழ் திரையுலகம் வாயடைத்து நிற்கிறது.
தெலுங்கு முன்னணி நடிகர் பவர் ஸ்டார் பவன் கல்யாண் இந்த படத்தில் நடிக்க உள்ளாராம். சமுத்திரக்கனி கதாபாத்திரத்தில் தெலுங்கில் அவரே நடிக்க உள்ளாராம். அதே போல, தம்பி ராமையா கதாபாத்திரத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம். தமிழில் தம்பி ராமையா அதில் சிறப்பாக நடித்திருப்பார். அதே போல தெலுங்கில் மோகன் லால் நடித்துவிட்டால் படம் நிச்சயம் தெலுங்கிலும் பேசப்படும்.
வினோதய சித்தம் தெலுங்கு ரீமேக்கையும் சமுத்திரக்கனிதான் இயக்க உள்ளாராம். விரைவில் இது குறித்த அதிகாராபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…