சிசிஎல் போட்டியில் இந்தவருடம் விளையாட மாட்டேன்! மேல் மரியாதை தான் முக்கியம் …..
தமிழ் சினிமாவில் தனக்கென்று ஓர் இடத்தினை பிடிக்க வேண்டுமென்று தொடந்து போராடி வருபவர் விக்ராந்த். இவருக்கு படம் மூலம் கிடைத்த ரசிகர்களை விட ஆண்டுதோறும் நடக்கும் சிசிஎல் போட்டியில் இவர் கிரிக்கெட்டில் கலக்குவதை பார்த்து சேர்ந்த ரசிகர்கள் தான் அதிகம். ஆனால், விக்ராந்த் இந்த வருடம் “நான் விளையாட மாட்டேன், ஒரு சில விஷயங்களுக்கு மேல் மரியாதை மிக முக்கியம்” என கூறியுள்ளார். அவர் வெளியே வர அளவிற்கு அப்படி என்ன நடந்தது?என்பது தெரியவில்லை. இந்நிலையில் விக்ராந்திற்கு ஆதரவாக நடிகர் விஷ்ணு விஷாலும் “உண்மை நண்பா” என கூறியுள்ளார்…
source: dinasuvadu.com