மார்க்கெட் இப்போ வேற! சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய சியான் விக்ரம்!

Vikram actor

Vikram  நடிகர் விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன் படங்களை வெற்றிகளை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

READ MORE- என்னோட சந்தோஷம் எல்லாம் போச்சு! கதறிய சிம்ரன்? வெளியான சீக்ரெட்! 

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விக்ரம் தனது 62-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை சித்தா திரைப்படத்தை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இயக்கி வருகிறார். படம் விக்ரமின் 62-வது படம் என்பதால் படத்திற்கு தற்காலிகமாக சியான் 62 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் விக்ரமுக்கு வில்லனாக நடிகர் எஸ்.ஜே. சூர்யா நடித்து வருகிறார்.

READ MORE – திகிலை கிளப்பும் ‘ஷைத்தான்’….முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்த திரைப்படத்திற்கான சின்ன டீசர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், இந்த படத்தில் நடிக்க விக்ரம் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிக்க சம்பளமாக விக்ரம் 40 கோடி கேட்டுள்ளாராம்.

READ MORE – நள்ளிரவில் அந்த இடத்தில் படப்பிடிப்பு! பயந்து நடுங்கிய ஹன்ஷிகா!

இதற்கு முன்னதாக 20 லிருந்து 30 கோடி வரை வாங்கி வந்த விக்ரம் இந்த சியான் 62 திரைப்படத்தில் நடிக்க தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி 40 கோடி வாங்கி உள்ளாராம். இவர் அதிரடியாக இப்படி சம்பளத்தை உயர்த்திய தகவல் கோலிவுட்டில் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விக்ரம் இந்த படத்திற்கு வாங்கிய சம்பளம் குறித்த தகவலை வலைப்பேச்சு தெரிவித்துள்ளது. இவர் இந்த அளவிற்கு சம்பளத்தை உயர்த்தியுள்ளார் என்றால் கண்டிப்பாக அவருக்கு தங்கலான் படம் அந்த அளவிற்கு வெற்றியை கொடுக்கும் என அவர் நம்பி இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்