Thangalaan [File Image]
தங்கலான் : இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள பீரியட் ஆக்ஷன் திரைப்படம் “தங்கலான்” ஒன்று. இந்த படத்தை இயக்குனர் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குகிறார். ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் பேனரில் பிரபல தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.
தங்கலான் திரைப்படம் விரைவில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியிட தயாராகி வருகிறது. இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. டீசரில் விக்ரம் கெட்டப் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதன்படி, டிரைலரும் சும்மா மிரட்டலாக வெளிவந்து ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
வெள்ளைக்காரர்களின் ஆசை பேச்சையும், பொன் மீதான மோகத்தாலும் கோலார் சுரங்கத்தை வேட்டையாட சென்ற விக்ரமிற்கு காத்திருக்கும் ஆபத்தும், தங்கம் எடுக்க வரும் வெள்ளைக்காரர்களையும் விக்ரமையும் தடுக்க நிற்கிறார் மாளவிகா மோகன். இப்படி டிவிஸ்ட்டாக செல்லும் காட்சிகளும், பா.ரஞ்சித்தின் மேக்கிங்கும் பார்ப்பதற்கே மெய் சிலிர்க்கிறது.
டிரைலரை வைத்து பார்க்கையில், கோலார் கோல்ட் ஃபீல்ட்ஸ் பின்னணியில் நடக்கும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியிருப்பது தெரிகிறது. இந்த படத்தில் பார்வதி திருவோடு மற்றும் மாளவிகா மோகனன் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…