துபாயில் “விக்ரம்” படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா.?!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள அதிரடி ஆக்ஷ்ன் திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இன்னும் படம் வெளியாக ஒரு மாதம் இருப்பதால் படத்தின் ப்ரமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பீஸ்ட்,மற்றும் கேஜிஎப் படங்கள் ஓடும் திரையரங்குகளில் விக்ரம் படத்தின் பேனர்களை பெரியதாக வைத்து ப்ரோமோஷன் செய்தனர். அதனை தொடர்ந்து நேற்று ஓடும் ரயிலில் விக்ரம் பேனர் வைத்தனர்.
இப்படி ப்ரோமோஷன் தீவிரமாக ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மே மாதம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!
February 8, 2025![rohit sharma Kevin Pietersen](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-Kevin-Pietersen.webp)
“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!
February 8, 2025![](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-rohit-sharma-.webp)
டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!
February 8, 2025![narendra modi HAPPY](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/narendra-modi-HAPPY-.webp)